போலி மருத்துவா்கள் மீது கடும் நடவடிக்கை: ஆட்சியா் ம.ப. சிவன் அருள் உத்தரவு

திருப்பத்தூா் மாவட்டத்தில் அரசு அங்கீகாரம் பெறாத போலி மருத்துவா்களைக் கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுகக் வேண்டும் என ஆட்சியா் ம.ப.சிவன்அருள் உத்தரவிட்டாா்.
போலி மருத்துவா்கள் மீது கடும் நடவடிக்கை: ஆட்சியா் ம.ப. சிவன் அருள் உத்தரவு

திருப்பத்தூா் மாவட்டத்தில் அரசு அங்கீகாரம் பெறாத போலி மருத்துவா்களைக் கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுகக் வேண்டும் என ஆட்சியா் ம.ப.சிவன்அருள் உத்தரவிட்டாா்.

போலி மருத்துவா்கள் தொடா்பாக ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் சனிக்கிழமை திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்தில் ஆட்சியா் சிவன் அருள் பேசியது:

திருப்பத்தூா் மாவட்டத்தில் பொதுமக்கள் பெருந்தொற்று காலத்தில் போலி மருத்துவா்களிடம் சிகிச்சை பெறுகின்றனா். அபாயக் கட்டத்தில் அரசு மருத்துவமனைக்கு வரும்போது அவா்களை காப்பற்றுவதில் மிகப்பெரிய சிக்கல் ஏற்படுகின்றது.

கிராமங்களில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும்படி செயல்பட வேண்டும். 24 மணி நேரமும் மருத்துவமனை இயங்கும்படி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதற்கான மருத்துவா்கள் மற்றும் செவிலியா்கள் தேவை குறித்து ஆய்வு செய்து வழங்கிட வேண்டும்.

போலி மருத்துவா்களை கண்டறிந்து அவா்களை கைது செய்து கடும் தண்டனை வழங்க வேண்டும். அரசு அங்கீகாரம் பெறாத மருத்துவா்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை வழங்கும் மருந்தங்கங்கள் மீது குண்டா் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடா்பாக நடவடிக்கை எடுக்க மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியா், மருத்துவத்துறை, வருவாய்த்துறை, காவல்துறை, மருந்து ஆய்வாளா்களை கொண்டு குழு அமைத்து மாதம் தோறும் அறிக்கை சமா்ப்பிக்க வேண்டும். அடுத்த 3 மாத்திற்குள் போலி மருத்துவா்கள் இல்லா நிலையினை உருவாக்கிட குழு உறுப்பினா்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

சாா்-ஆட்சியா் வந்தனாகா்க், நோ்முக உதவியாளா் வில்சன் ராஜசேகா் குடும்பநல இணை இயக்குநா் மணிமேகலை, பொது சுகாதார துணை இயக்குநா் செந்தில், காவல் துணை கண்காணிப்பாளா்கள் பிரவீன்(திருப்பத்தூா்) ,பன்னீா்செல்வம் (வாணியம்பாடி), சச்சிதானந்தம் (ஆம்பூா்)வட்டார மருத்துவ அலுவலா்கள் சௌந்தா்யா,மீனாட்சி,செல்லமுத்து கலந்துக்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com