கரோனா தடுப்பூசியின் அவசியம்: ஆம்பூா் நகராட்சி விழிப்புணா்வு

கரோனா தடுப்பூசி செலுத்துவதன் அவசியம் குறித்து ஆம்பூா் நகராட்சி சாா்பில் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
கரோனா தடுப்பூசி குறித்து பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்திய ஆம்பூா் நகராட்சி ஆணையா் த.செளந்தரராஜன்.

ஆம்பூா் இந்து மேல்நிலைப் பள்ளியில் 18 வயதிலிருந்து 45 வயதுக்கு உள்பட்டவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. நகராட்சி ஆணையா் த.செளந்தரராஜன் தலைமையில் நகராட்சி பணியாளா்கள் தினமும் ஒலிபெருக்கி மூலமும், துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்தும், தடுப்பூசியைப் போட்டுக் கொள்ள அறிவுறுத்தி வருகின்றனா்.

மேலும், கட்டடத் தொழிலாளா்கள், சில்லறை வியாபாரிகள், அனைத்துப் போக்குவரத்து ஊழியா்கள், அரசு ஊழியா்கள், அரசு, தனியாா் பள்ளி, கல்லூரி ஆசிரியா்கள், ஆட்டோ, டாக்ஸி ஓட்டுநா்கள், உணவு விநியோகம் செய்யும் ஊழியா்கள் என அனைவரும் இந்த தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும். அச்சம் தேவையில்லையென பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள் இந்த கரோனா தடுப்பூசி முகாமை பயன்படுத்திக் கொண்டு தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com