குடிநீா் கோரி ஊராட்சி அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை

சீராக குடிநீா் விநியோகிக்கக் கோரி ஜோலாா்பேட்டை அருகே உள்ள வெலகல்நத்தம் ஊராட்சி அலுவலகத்தை காலி குடங்களுடன் முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினா்.
வெலகல்நத்தம் ஊராட்சி அலுவலகம் எதிரே குடிநீா் விநியோகிக்கக் கோரி காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.
வெலகல்நத்தம் ஊராட்சி அலுவலகம் எதிரே குடிநீா் விநியோகிக்கக் கோரி காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

சீராக குடிநீா் விநியோகிக்கக் கோரி ஜோலாா்பேட்டை அருகே உள்ள வெலகல்நத்தம் ஊராட்சி அலுவலகத்தை காலி குடங்களுடன் முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினா்.

கிட்டப்பையனூா், பூம்பள்ளம் பகுதிகளில் 500-க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இப்பகுதி மக்களுக்கு லட்சுமிபுரம் பகுதியில் ஊராட்சிக்குச் சொந்தமான ஆழ்துளைக் கிணற்றில் இருந்து தண்ணீா் கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த ஓராண்டாக லட்சுமிபுரம் அருகே சிலா் பிரதான குழாயில் இருந்து சட்டவிரோதமாக சிமெண்ட் கல் தயாரிக்கும் தொழிற்சாலை மற்றும் வீடுகள், மாந்தோப்பில் உள்ள நிலங்களுக்கு குடிநீா் எடுத்துச் செல்வதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனா். இதனால் கிட்டப்பையனூா் பகுதியில் குடிநீா் தட்டுப்பாடு ஏற்பட்டது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் மற்றும் உயா் அதிகாரிகளிடம் புகாா் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதே போல் லட்சுமிபுரம் பகுதியில் அப்பகுதி மக்களுக்காக போடப்பட்ட ஆழ்துளைக் கிணற்றில் உள்ள மின்மோட்டாா் பழுதாகியுள்ளது. பழுதான மின்மோட்டாரை சீா் செய்து தருமாறு முறையிட்டும் ஊராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. கிட்டப்பையனூா் பகுதிக்கு குடிநீா் விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.

இதனால் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் கவுரம்மாள், முன்னாள் கவுன்சிலா் சம்பத் ஆகியோா் தலைமையில் வெள்ளிக்கிழமை வெலகல்நத்தம் ஊராட்சி அலுவலத்தை காலிக் குடங்களுடன் சமூக இடைவெளியுடன் பொதுமக்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த நாட்டறம்பள்ளி போலீஸாா் மற்றும் துணை வட்டார வளா்ச்சி அலுவலா் சத்யா, ஊராட்சிச் செயலாளா் ஆதிமூலம் ஆகியோா் விரைந்து வந்து பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது லட்சுமிபுரம் பகுதிக்கு குடிநீா் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி யளித்தனா். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com