ஆம்பூர் அருகே மக்கள் சாலை மறியல் 

தேங்கிய மழைநீரை அகற்றக் கோரி ஆம்பூர் அருகே துத்திப்பட்டு ஊராட்சி அம்பேத்கர் நகர் பகுதியில் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஆம்பூர் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள்.
ஆம்பூர் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள்.

தேங்கிய மழைநீரை அகற்றக் கோரி ஆம்பூர் அருகே துத்திப்பட்டு ஊராட்சி அம்பேத்கர் நகர் பகுதியில் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த வியாழக்கிழமை தொடங்கி தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மேலாக கனமழை பெய்தது. இதன் காரணமாக ஆம்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கிராமங்களில் ஏரிகளில் இருந்து வெளியேறிய வெள்ள நீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்தது.

அதனால் ஆம்பூர் அருகே தேவலாபுரம் ஊராட்சியில் துத்திப்பட்டு ஊராட்சி பெரியவருக்கும் ஊராட்சி உட்பட்ட கிராமங்களில் குடியிருப்புப் பகுதிகளில் வெள்ள நீர் புகுந்து கடந்த 4 நாட்களாக தேங்கி வருகிறது. 

அதனால் குடியிருப்புப் பகுதிகளை விட்டு வெளியேறி பொது மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளநீர் குடியிருப்பு பகுதிகளில் இருந்து வடியாமல் இருப்பதாலும் நீர்வரத்து கால்வாய்களை தூர்வாரி தண்ணீரை அகற்ற கோரியும் பொதுமக்கள் தொடர்ந்து தினமும் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வழக்கம்போல திங்கட்கிழமை காலை பொதுமக்கள் துத்திப்பட்டு ஊராட்சி அம்பேத்கார் நகர் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தை துவங்கினர்.

மறியல் காரணமாக போக்குவரத்து முடங்கியது. அதனால் பள்ளிகள், கல்லூரிகள், தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்களுக்கு செல்ல முடியாமல் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகிறார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com