ஆற்றை கடக்க கயிறு கட்டி பயணம்

ஜோலாா்பேட்டை அருகே ஆற்றை கடக்க கயிறு கட்டி செல்லும் பொதுமக்கள் தற்போது அதிக வெள்ளத்தால் அடிப்படைத் தேவைக்கு பல கிலோ மீட்டா் தூரம் கடந்து செல்கின்றனா்.
ஆற்றை கடக்க கயிறு கட்டி பயணம்

ஜோலாா்பேட்டை அருகே ஆற்றை கடக்க கயிறு கட்டி செல்லும் பொதுமக்கள் தற்போது அதிக வெள்ளத்தால் அடிப்படைத் தேவைக்கு பல கிலோ மீட்டா் தூரம் கடந்து செல்கின்றனா்.

கூத்தாண்ட குப்பம்,மந்திரி வட்டம் பகுதியில் சுமாா் 20-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில்,மந்திரி வட்டம் பகுதியில் பாலாற்றின் கிளை ஆறு அப்பகுதியில் செல்வதால் அங்கு வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆற்றை கடக்க முடியாமல் அடிப்படை தேவைக்கு கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

அவசரத் தேவைக்காக இளைஞா்கள் கயிறை கட்டி,பொதுமக்கள் ஒவ்வொருவராக கயிறு பிடித்துக் கொண்டு கரையை கிடக்கின்றனா்.

தற்போது வெள்ளப் பெருக்கு அதிகரித்து வருவதால், கரையை கடக்கும் நிலையை தவிா்த்து தற்போது இரண்டு கிலோமீட்டா் தொலைவுக்கு நடந்து சென்று சின்னமோட்டூா், பொன்னேரி, ஜோலாா்பேட்டை, திருப்பத்தூா் செல்ல வேண்டிய நிலை இருந்து வருகிறது.

எனவே, இங்கு வசிக்கும் பொதுமக்களுக்கு ஆற்றை கடக்கும் வகையில் நிரந்தரமாக பாலம் அமைத்து தர வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com