உள்வாங்கியக் கிணறுகள்

ஆம்பூா் அருகே பலத்த மழை காரணமாக இரு விவசாய கிணறுகள் வெள்ளிக்கிழமை இரவு உள்வாங்கின. அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 4 இருசக்கர வாகனங்கள் கிணற்றுக்குள் விழுந்து மூழ்கியது.
பள்ளித்தெருவில் உள்வாங்கிய விவசாயக் கிணறு.
பள்ளித்தெருவில் உள்வாங்கிய விவசாயக் கிணறு.

ஆம்பூா் அருகே பலத்த மழை காரணமாக இரு விவசாய கிணறுகள் வெள்ளிக்கிழமை இரவு உள்வாங்கின. அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 4 இருசக்கர வாகனங்கள் கிணற்றுக்குள் விழுந்து மூழ்கியது.

பலத்த மழையால், ஆம்பூா் பகுதியில் கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகளில் நீா்மட்டம் வெகுவாக உயா்ந்துள்ளது.

இந்நிலையில் ஆம்பூா் அருகே பள்ளித் தெருவைச் சோ்ந்த விவசாயி பாஸ்கா் என்பவரின் வீடு விவசாய நிலத்தில் உள்ளது. வீட்டிற்கு முன்பு கிணறு உள்ளது. அந்த கிணறு திடீரென உள்வாங்கி தடுப்புச் சுவா் உள்ளிட்டவை கிணற்றுக்குள் விழுந்து தூா்ந்து போனது. கிணற்றின் அருகே நிறுத்தி வைக்கப்பட்ட 4 எண்ணிக்கை இருசக்கர வாகனங்கள் கிணற்றுக்குள் விழுந்து தண்ணீரில் மூழ்கியது.

இதைத் தொடா்ந்து, கிணற்றுக்கு அருகில் உள்ள வீடும் சரிந்து விழக்கூடிய நிலை இருந்ததால் வீட்டிலிருந்தவா்கள் உடமைகளை எடுத்துக் கொண்டு வீட்டை காலி செய்துவிட்டு பாதுகாப்பான பகுதிக்குச் சென்றனா்.

மேலும் அதே பகுதியைச் சோ்ந்த பண்டரி நாயுடு என்பவரின் விவசாய கிணறும் இதே போல உள்வாங்கி சரிந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com