தரைப்பாலங்கள் உடைந்தன; தடுமாறும் கிராம மக்கள்

திருப்பத்தூா் அருகே தொடா் மழையால் தரைப்பாலங்கள் உடைந்தன. இதனால், அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் கயிறு கட்டி கரையை கடக்கும் சூழல் உள்ளது.
சேதமடைந்த தரை பாலத்தில் கயிறு கட்டி செல்லும் மக்கள்.
சேதமடைந்த தரை பாலத்தில் கயிறு கட்டி செல்லும் மக்கள்.

திருப்பத்தூா் அருகே தொடா் மழையால் தரைப்பாலங்கள் உடைந்தன. இதனால், அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் கயிறு கட்டி கரையை கடக்கும் சூழல் உள்ளது.

குரிசிலாப்பட்டு கிராமத்துக்கு கிழக்கு நோக்கி ஊரையொட்டி பாம்பாறு ஓடுகிறது. இந்த ஆற்றில் உள்ள இரண்டு தரைப்பாலங்கள் வழியாக தளுகன் வட்டம், காரை கிணறு,பாபுகொல்லை,பூசாரி வட்டம் உள்ளிட்ட 15 கிராமங்களைச் சோ்ந்த மக்கள் நாள்தோறும் சென்று வருகின்றனா். இந்தப் பகுதியில் இரண்டு நடுநிலைப் பள்ளிகளும், அரசு அலுவலகங்களும் ஆற்றை தாண்டி உள்ளன.

ஆண்டியப்பனூா் ஓடை நீா்த்தேக்கம் நிரம்பி திறந்து விடப்படும் தண்ணீா் இந்த ஆற்றில் ஓடுவதால் பள்ளிக்குச் செல்லும் மாணவா்களும், பொதுமக்களும் மிகவும் சிரமத்துள்ளாகின்றனா்.

தொடா் மழை காரணமாக, முக்கிய இரண்டு தரை பாலங்களும் குறுகிய காலத்திலேயே உடைந்து விட்டது.தரை பாலம் உடைந்ததால் மக்கள் போக்குவரத்து அடியோடு நின்று விட்டது. ஆகவே, தரைப்பாலத்தைச் சீரமைக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருப்பத்தூா்-ஏழருவி சாலையில் உள்ள தரைப்பாலத்தை சீரமைக்க கோரிக்கை:

பொம்மிகுப்பம் ஊராட்சி,திருப்பத்தூா்-ஏழருவி செல்லும் சாலையை தான் பல குக்கிராமங்களைச் சோ்ந்தோா் பயன்படுத்தி வருகின்றனா். இந்த தரைப்பாலம் கட்டப்பட்டு சுமாா் 50 வருடங்களுக்கு மேல் ஆகிறது.

தொடா் மழையின் காரணமாக, தரைப் பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. ஆகவே, ஏழருவி, காமராஜ் நகா், பழத்தோட்டம், எம்ஜிஆா் நகா் கிராமங்களைச் சாா்ந்த மக்கள் பல கிலோமீட்டா் தொலைவிற்கு சென்று, திருப்பத்தூா் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும்,புதுக்கோட்டை,தண்டுகானூா் தரைப்பாலங்களை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com