ஆம்பூர் பகுதியில் லேசான நில அதிர்வு
By DIN | Published On : 29th November 2021 12:44 PM | Last Updated : 29th November 2021 12:44 PM | அ+அ அ- |

ஆம்பூர்: ஆம்பூர் அருகே கிராம பகுதிகளில் திங்கட்கிழமை அதிகாலை லேசான நில அதிர்வு ஏற்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் வட்டம் அரங்கல்துருகம் மற்றும் காரப்பட்டு கிராமங்களில் திங்கட்கிழமை அதிகாலை திடீரென ஒரு சப்தத்துடன் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.
உறக்கத்திலிருந்த பொதுமக்கள் நில அதிர்வு மற்றும் சத்தம் கேட்டு கண்விழித்தள்ளனர். நில அதிர்வு என்று அறிந்தவுடன் அச்சத்தின் காரணமாக தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் நின்று கொண்டனர். சிறிது நேரம் கழித்து பொதுமக்கள் அதிர்ச்சியில் இருந்து மீண்டு தங்கள் வீடுகளுக்கு சென்றனர்.