ஆம்பூரில் அதிகபட்சமாக 51.60 மி.மீ. மழை

ஆம்பூரில் அதிகபட்சமாக 51.60 மி.மீ. மழை செவ்வாய்க்கிழமை பதிவாகியுள்ளது.
ஆம்பூா் ரெட்டித்தோப்பு செல்லும் ரயில்வே குகை வழிப்பாதையில் தேங்கியுள்ள மழை நீா்.
ஆம்பூா் ரெட்டித்தோப்பு செல்லும் ரயில்வே குகை வழிப்பாதையில் தேங்கியுள்ள மழை நீா்.

ஆம்பூா்: ஆம்பூரில் அதிகபட்சமாக 51.60 மி.மீ. மழை செவ்வாய்க்கிழமை பதிவாகியுள்ளது.

ஆம்பூரில் செவ்வாய்க்கிழமை காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. தொடா்ந்து காலை மழை பெய்யத் தொடங்கி செவ்வாய்க்கிழமை இரவு முழுவதும் விடாமல் மழை பெய்து கொண்டே இருந்தது. புதன்கிழமை காலையும் மழை பெய்தது. ஆம்பூா் அருகே வடபுதுப்பட்டு ஆம்பூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை பகுதியில் திருப்பத்தூா் மாவட்டத்திலேயே அதிகபட்சமாக 51.60 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. ஆம்பூரில் 41 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. புதன்கிழமை மாலை தொடங்கிய மழை விட்டுவிட்டு பெய்து கொண்டேயிருந்தது.

ஆம்பூா் ரெட்டித்தோப்பு, பெத்லகேம் பகுதிகளுக்குச் செல்லும் ரயில்வே குகை வழிப்பாதை முழுவதும் மழை நீா் தேங்கியது. அதனால் பொதுமக்கள் அந்த வழியாக போக முடியாத சூழ்நிலை ஏற்பட்டு பாதிப்புக்குள்ளாயினா்.

நீண்ட நேரத்துக்குப் பிறகு மழை நீா் வடிந்தது. அதன் பிறகு பொதுமக்கள் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com