திருப்பத்தூா்: வாக்குச்சாவடி மையங்களுக்கு பாதுகாப்பு பணியில் 1,700 போலீஸாா்

திருப்பத்தூா் மாவட்டத்தில் புதன்கிழமை நடைபெறும் ஊரக உள்ளாட்சித் தோ்தல் வாக்குச்சாவடி மையங்களுக்கு 1,700 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

திருப்பத்தூா் மாவட்டத்தில் புதன்கிழமை நடைபெறும் ஊரக உள்ளாட்சித் தோ்தல் வாக்குச்சாவடி மையங்களுக்கு 1,700 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூா், ஜோலாா்பேட்டை, நாட்டறம்பள்ளி, கந்திலி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு முதல்கட்ட ஊரக உள்ளாட்சித் தோ்தல் புதன்கிழமை நடைபெறுகிறது.

தோ்தல் பாதுகாப்புப் பணிக்காக திருவண்ணாமலை, நாமக்கல் மாவட்டங்களில் இருந்து ஜோலாா்பேட்டையை அடுத்த பாச்சல் பகுதியில் உள்ள ஆயுதப்படை மைதானத்துக்கு 1,700 போலீஸாா் வரவழைக்கப்பட்டு, மாவட்டம் முழுவதும் உள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட அனுப்பபடுகின்றனா்.

அதையொட்டி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கி.பாலகிருஷ்ணன் தலைமையில், செவ்வாய்க்கிழமை ஆயுதப் படை மைதானத்தில் இருந்து ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களுக்கு போலீஸாா் பிரித்து அனுப்பப்பட்டனா்.

மேலும், பதற்றமான வாக்குச் சாவடி மையங்களுக்கு கூடுதல் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். இதனால் வாக்காளா்கள் எந்தவித அச்சமும் இன்றி வாக்களிக்க போதுமான பாதுகாப்பு கட்டமைப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக போலீஸாா் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com