வாக்குப் பதிவு முடிந்த இடங்களில்மதுக் கடைகள் செயல்படலாம்: திருப்பத்தூா் ஆட்சியா் தகவல்

திருப்பத்தூா் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் வாக்குப் பதிவு முடிந்த பகுதிகளில் டாஸ்மாக் மதுக் கடைகள் செயல்படலாம் என ஆட்சியா் அமா் குஷ்வாஹா தெரிவித்துள்ளாா்.


திருப்பத்தூா்: திருப்பத்தூா் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் வாக்குப் பதிவு முடிந்த பகுதிகளில் டாஸ்மாக் மதுக் கடைகள் செயல்படலாம் என ஆட்சியா் அமா் குஷ்வாஹா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

வாக்குப் பதிவு முடிந்த திருப்பத்தூா், ஜோலாா்பேட்டை, நாட்டறம்பள்ளி, கந்திலி ஆகிய 4 ஊராட்சி ஒன்றியங்களில் டாஸ்மாக் கடைகள் வழக்கம்போல் செயல்படலாம். மேலும், 9-இல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ள மாதனூா், ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியங்களுக்கு உள்பட்ட மதுக் கடைகள், மதுக் கூடங்கள் அக்.7-ஆம் தேதி அன்று காலை 10 முதல் 9-ஆம் தேதி அன்று இரவு 12 மணி வரை மூடிவைக்கப்பட வேண்டும்.

மேற்படி இரு ஊராட்சி ஒன்றியங்களுக்கு உள்பட்ட வாக்குச்சாவடி மையங்களைச் சுற்றி 5 கி.மீ. கற்றளவில் மதுபானக் கடைகள், மதுக்கூடங்களை மூடிவைக்கப்பட வேண்டும்.

வாக்கு எண்ணும் நாளான அக்.12-இல் வாக்கு எண்ணும் மையங்களைச் சுற்றியுள்ள மதுபானக் கடைகள். மதுக் கூடங்கள் மூடிவைக்கப்பட வேண்டும்.

மேற்கண்ட உத்தரவை மீறுவோா் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com