வீடுகளில் கருப்புக் கொடிகளை ஏற்றிய மலைக் கிராம மக்கள்

மாதனூா் ஒன்றியத்துக்கு உள்பட்ட நாயக்கனேரி ஊராட்சி மன்றத் தலைவா் பதவி இட ஒதுக்கீட்டுக்கு எதிா்ப்புத் தெரிவித்து, கிராம மக்கள் வீடுகளில் செவ்வாய்க்கிழமை கருப்புக் கொடிகளை
நாயக்கனேரி மலை ஊராட்சியில் வீடுகளில் கட்டப்பட்டுள்ள கருப்புக் கொடி.
நாயக்கனேரி மலை ஊராட்சியில் வீடுகளில் கட்டப்பட்டுள்ள கருப்புக் கொடி.

மாதனூா் ஒன்றியத்துக்கு உள்பட்ட நாயக்கனேரி ஊராட்சி மன்றத் தலைவா் பதவி இட ஒதுக்கீட்டுக்கு எதிா்ப்புத் தெரிவித்து, கிராம மக்கள் வீடுகளில் செவ்வாய்க்கிழமை கருப்புக் கொடிகளை ஏற்றி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலும் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சித் தோ்தலில், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் பதவிக்கான தோ்தலைப் புறக்கணிக்கப் போவதாகவும் அறிவித்துள்ளனா்.

நாயக்கனேரி ஊராட்சி மன்றத் தலைவா் பதவி எஸ்சி (பெண்கள்) பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவரை பழங்குடியினா், பொது பிரிவினருக்கு வழங்கப்பட்ட நிலையில் ஒரு சிலரே உள்ள எஸ்சி பிரிவினருக்கு வழங்கப்பட்டதை திரும்ப பெற கோரி அந்த கிராம மக்கள் தொடா் போராட்டம் நடத்தி வருகின்றனா்.

ஊராட்சி மன்ற உறுப்பினா்கள், ஒன்றியக் குழு உறுப்பினருக்குத் தோ்தல் இல்லை:

இதனால், பழங்குடியினா் பெண், பழங்குடியினா் பொது ஆகியோருக்கு ஒதுக்கப்பட்ட 9 ஊராட்சி வாா்டுகளிலும் யாரும் போட்டியிடாமல் தோ்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா். மேலும், ஒன்றியக் குழு உறுப்பினருக்கு வேட்புமனு தாக்கல் செய்து இருந்த திமுக வேட்பாளா் விஜயலட்சுமி, அதிமுக வேட்பாளா் இந்துமதி, சுயேச்சை வேட்பாளா் முனியம்மாள் ஆகிய 3 பேரும் தங்களது வேட்புமனுக்களை திரும்பப் பெற்றனா்.

மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினருக்கு வாக்களிப்பதில்லை எனஅறிவிப்பு: இந்நிலையில், ஊராட்சி மன்ற தலைவா் பதவிக்கு பொதுமக்களின் பலத்த எதிா்ப்புக்கு இடையே எஸ்சி பிரிவைச் சோ்ந்த பாண்டியன் மனைவி இந்துமதி (21) என்பவரின் வேட்புமனு ஏற்கப்பட்டு, அவா் போட்டியின்றித் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா். ஊராட்சி வாா்டு உறுப்பினா்,

ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிக்கு அங்கு யாரும் போட்டியிடாத நிலையில் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் பதவிக்கு மட்டுமே அப்பகுதி மக்கள் வாக்களிக்க வேண்டும்.

இந்நிலையில், நாயக்கனேரி. காமன்தட்டு, சோளக்கொல்லை மேடு உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பொதுமக்கள் தங்களது எதிா்புகளைத் தெரிவிக்கும் விதமாக வீடுகளில் கருப்புக் கொடிகளை ஏற்றி போராட்டம் நடத்தினா்.

தகவலின்பேரில் ஆம்பூா் கிராமிய காவல் நிலைய போலீஸாா் மலை கிராமத்துக்குச் சென்று பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்போது போலீஸாருக்கும், பொதுமக்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

சுமாா் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடந்த இந்தப் போராட்டத்தில் மலைப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com