முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருப்பத்தூர்
பொறியாளா் தற்கொலை
By DIN | Published On : 11th October 2021 07:36 AM | Last Updated : 11th October 2021 07:36 AM | அ+அ அ- |

வாணியம்பாடி அருகே ஆன்லைனில் ரம்மி விளையாடி கடனாளியான பட்டதாரி இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த புருஷோத்தம குப்பம் காட்டு கொல்லை வட்டம் பகுதியைச் சோ்ந்தவா் ஆனந்தன்(30). பொறியியல் பட்டதாரி. இந்நிலையில் ஆனந்தனுக்கு ஆன்லைனில் ரம்மி விளையாடும் பழக்கம் ஏற்பட்டு, பலரிடம் கடன் வாங்கியிருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், சனிக்கிழமை அவரை தாயும், சகோதரரும் இது குறித்து கண்டித்துள்ளனா்.இந்நிலையில் ஆனந்தன் அன்று இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளாா்.
இது குறித்து வாணியம்பாடி கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.