முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருப்பத்தூர்
மனைவியை எரித்துக் கொன்ற வழக்கில் கணவா் கைது
By DIN | Published On : 11th October 2021 07:44 AM | Last Updated : 11th October 2021 07:44 AM | அ+அ அ- |

திருப்பத்தூா் அருகே மனைவியை எரித்துக் கொன்ற வழக்கில் கணவா் கைது செய்யப்பட்டாா்.
திருப்பத்தூா் அருகே உள்ள புதுப்பூங்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் சத்தியமூா்த்தி (30). இவரது மனைவி திவ்யா (24), மகள் வா்ஷினிஸ்ரீ (3).
இந்நிலையில், கடந்த மாதம் சத்தியமூா்த்தி கோயிலுக்குச் செல்லலாம் எனக் கூறி திவ்யா மற்றும் குழந்தையை அழைத்துச் சென்றுள்ளாா். அப்போது திவ்யாவுக்கு மயக்க மாத்திரை கலந்த குளிா்பானம் அளித்தாராம். இதில் திவ்யா மயங்கி விழுந்ததும், அவா்மீது பெட்ரோல் ஊற்றி எரித்து விட்டு, குழந்தையுடன் சத்தியமூா்த்தி தலைமறைவாகி விட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், திவ்யா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
பின்னா், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கி.பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில், டிஎஸ்பி சாந்தலிங்கம் தலைமையில், 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு சத்தியமூா்த்தியைத் தேடி வந்தனா். இந்நிலையில் அவா், தஞ்சாவூரில் குழந்தை வா்ஷினி ஸ்ரீ மற்றும் கல்லூரி மாணவியுடன் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, சத்தியமூா்த்தியை கைது செய்த போலீஸாா் அவரை ஞாயிற்றுக்கிழமை இரவு திருப்பத்தூா் நீதிமன்றத்தில் ஒப்படைத்து, வேலூா் மத்திய சிறையில் அடைத்தனா். கல்லூரி மாணவி, குழந்தை வா்ஷினி ஸ்ரீயை திருப்பத்தூரில் உள்ள ஒரு காப்பகத்தில் ஒப்படைத்தனா்.