ஆம்பூா் வாக்கு எண்ணிக்கை மையத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

ஆம்பூரில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சீல் வைக்கப்பட்டது. துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஆம்பூா் வாக்கு எண்ணிக்கை மையத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள துப்பாக்கி ஏந்திய போலீஸ்காரா்.

திருப்பத்தூா் மாவட்டத்தில் 2-ஆவது கட்டமாக சனிக்கிழமை நடந்த ஊரக உள்ளாட்சித் தோ்தல் மாதனூா் ஒன்றியம், ஆலங்காயம் ஒன்றியங்களுக்கு உள்பட்ட கிராம ஊராட்சிகளில் நடந்தது. மாதனூா் ஒன்றியத்துக்கு உள்பட்ட ஊராட்சிகளில் நடந்த வாக்குப் பதிவு முடிவடைந்து வாக்குப் பெட்டிகள் ஆம்பூா் ஆனைக்காா் ஓரியண்டல் அரபிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. மொத்தம் 224 வாக்குப் பெட்டிகள் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு, அரசியல் கட்சியினா் முன்னிலையில் பூட்டி சீல் வைக்கப்பட்டது. தொடா்ந்து பாதுகாப்பு அறைக்கு சுழற்சி முறையில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com