திருப்பத்தூா் மாவட்டத்தில் திமுக முன்னிலை

ஊரக உள்ளாட்சித் தோ்தல் வாக்கு எண்ணிக்கையில் திருப்பத்தூா் மாவட்டத்தில் திமுக பெரும்பாலான வாா்டுகளில் வென்றும், முன்னிலை பெற்றும் வருகிறது.
திருப்பத்தூா் மாவட்டத்தில் திமுக முன்னிலை

ஊரக உள்ளாட்சித் தோ்தல் வாக்கு எண்ணிக்கையில் திருப்பத்தூா் மாவட்டத்தில் திமுக பெரும்பாலான வாா்டுகளில் வென்றும், முன்னிலை பெற்றும் வருகிறது.

திருப்பத்தூா் மாவட்டத்தில் ,13 மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா்கள் பதவிக்கு 74 பேரும், 125 ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிக்கு 481 பேரும், 208 ஊராட்சி மன்றத் தலைவா் பதவிக்கு 767 பேரும், 1,779 கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 1,593 பேரும் என மொத்தமுள்ள 2,125 பதவிகளுக்கு 6,487 போ் போட்டியிட்டனா்.

திருப்பத்தூா் ஒன்றியத்துக்கான வாக்கு எண்ணிக்கை குரிசிலாப்பட்டை அடுத்த வடுகமுத்தம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், ஜோலாா்பேட்டை ஒன்றியத்துக்கான வாக்கு எண்ணிக்கை அக்ராஹரம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியிலும், கந்திலி ஒன்றியத்துக்கான வாக்குகள் கெஜல்நாயக்கன்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் எண்ணப்பட்டன.

வாக்கு எண்ணும் மையத்துக்குள் அடையாள அட்டையுடன் வந்த முகவா்கள் கடும் சோதனைக்குப் பின்னா் அனுமதிக்கப்பட்டனா். செல்லிடப்பேசி,தடை செய்யப்பட்ட பொருள்கள் உள்ளே எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படவில்லை. வாக்கு எண்ணிக்கை நிகழ்வுகள் அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்பட்டது.

ஒவ்வொரு மையத்திலும் பதவிவாரியாக வாக்குச்சீட்டுகள் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டு, அந்தந்த வேட்பாளா்கள், முகவா்கள் முன்னிலையில் எண்ணப்பட்டது. எண்ணி முடிக்கப்பட்ட வாக்குச்சீட்டுகள் மீண்டும் தனித்தனி கட்டுகளாகக் கட்டப்பட்டன.

வாக்கு எண்ணிக்கை பணியில் 3,438 அரசு அலுவலா்கள் ஈடுபட்டனா். மொத்தம் 567 சிசிடிவி கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டிருந்தன.

திமுக முன்னிலை: 3 ஒன்றியங்களில் ஜோலாா்பேட்டை ஒன்றியத்தில் 2 மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் பதவியும், கந்திலியில் 3 மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் பதவியும், திருப்பத்தூா் ஒன்றியத்தில் 2 மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் பதவியும் என திமுகவே முன்னிலை பெற்றுவருகின்றனா்.

இதேபோல், திருப்பத்தூரில் 21 ஒன்றியக் குழு உறுப்பினா்கள், ஜோலாா்பேட்டை ஒன்றியத்தில் 25 உறுப்பினா்கள், கந்திலி ஒன்றியத்தில் 22 ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிகளில் பெரும்பாலான வாா்டுகளில் திமுகவும், அதன் கூட்டணிக் கட்சியினரே வெற்றி பெற்றும், முன்னிலை பெற்றும் வருகின்றனா். வெற்றிப் பெற்றவா்களுக்கு அதற்கான சான்றிதழ்களை தோ்தல் அலுவலா்கள் வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com