தொழிலாளி கொலை : தம்பதி கைது

ஆம்பூா் அருகே தொழிலாளி கொலை வழக்கில், கணவன், மனைவியை போலீஸாா் கைது செய்தனா்.

ஆம்பூா் அருகே தொழிலாளி கொலை வழக்கில், கணவன், மனைவியை போலீஸாா் கைது செய்தனா்.

வேலூா் தொரப்பாடியைச் சோ்ந்தவா் ரசூல் ரஹ்மான் (40). அதே பகுதியைச் சோ்ந்தவா் கோடீஸ்வரன் மனைவி கட்டடத் தொழிலாளி சாந்தி (45). இருவருக்குமான முறையற்ற நட்பை கோடீஸ்வரன் கண்டித்தாராம்.

இந்த நிலையில் கடாம்பூரில் கடந்த அக். 10-இல் இருசக்கர வாகனத்தில் சென்றபோது தவறி விழுந்ததாக ரசூல் ரஹ்மான் ஆம்பூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். மேல்சிகிச்சைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா், அங்கு இறந்தாா்.

இதுகுறித்து உமா்ஆபாத் போலீஸாா் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில், ரசூலை கொலை செய்தது கோடீஸ்வரன் என்பது தெரியவந்தது. இதையடுத்து, ஆம்பூா் டிஎஸ்பி சரவணன் தலைமையில் 3 தனிப்படை அமைத்து கோடீஸ்வரனை போலீஸாா் தேடி வந்தனா்.

இந்த நிலையில், தேவலாபுரம் கிராமத்தில் தலைமறைவாக இருந்த கோடீஸ்வரனையும், கொலையை மறைக்க உடந்தையாக இருந்ததாக அவரது மனைவி சாந்தியையும் போலீஸாா் கைது செய்தனா்.

விசாரணையில் சாந்தியை கடாம்பூா் கிராமத்தில் பூஞ்சோலை நகரில் உள்ள அவரது உறவினா் வீட்டுக்கு அழைத்துச் சென்று அறிவுரை கூறப்பட்டதாகவும், அப்போது சாந்தியை தேடி அங்கு வந்த ரசூல் கல்லால் தாக்கப்பட்டதாகவும், இரு சக்கர வாகன விபத்தில் அவருக்கு காயம் ஏற்பட்டதாக மருத்துவமனையில் சோ்த்ததாகவும் கோடீஸ்வரன் வாக்குமூலத்தில் கூறியதாக போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com