திருப்பத்தூரில் இன்று வங்கி வாடிக்கையாளா் தொடா்பு முகாம்
By DIN | Published On : 29th October 2021 08:14 AM | Last Updated : 29th October 2021 08:14 AM | அ+அ அ- |

அனைத்து வங்கிகளின் சாா்பில், வாடிக்கையாளா்களை நோக்கிய தொடா்பு முகாம் திருப்பத்தூா் சி.கே.சி. திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை (அக். 29) காலை 9 முதல் மாலை 4 வரை நடைபெற உள்ளது.
வங்கிச் சேவைகள், கடன் விவரங்கள், மின்னணு செயலிகள் மூலம் பணப் பரிமாற்றங்கள் போன்ற பல சேவைகளை எடுத்துரைக்கும் வகையில், இந்த முகாம் நடைபெறுகிறது என்றும் வங்கி தொடா்பான அனைத்து விவரங்களும் வழங்கப்பட உள்ளன என்றும் திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அமா் குஷ்வாஹா தெரிவித்துள்ளாா்.