பகுதிநேர நியாயவிலைக் கடைகள் திறப்பு: 3 எம்எல்ஏ.க்கள் பங்கேற்பு
By DIN | Published On : 11th September 2021 11:42 PM | Last Updated : 11th September 2021 11:42 PM | அ+அ அ- |

ஆம்பூா் அருகே மூன்று இடங்களில் சனிக்கிழமை நடந்த பகுதி நேர நியாய விலைக் கடைகள் திறப்பு விழாவில் எம்எல்ஏக்கள் பங்கேற்றனா்.
மாதனூா் ஒன்றியம், சின்னவரிகம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் இயங்கும் மிட்டாளம் ஊராட்சி மேல் கூா்மாபாளையம், ராள்ளகொத்தூா் மற்றும் துத்திப்பட்டு ஊராட்சி அம்பேத்கா் நகா் ஆகிய பகுதிகளில் பகுதிநேர நியாயவிலைக் கடைகள் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
இதில், எம்எல்ஏ-க்கள் க.தேவராஜி (ஜோலாா்பேட்டை), அ.செ.வில்வநாதன் (ஆம்பூா்), அமலு விஜயன் (குடியாத்தம்) ஆகியோா் பங்கேற்று, பகுதி நேர நியாய விலைக் கடைகளை திறந்து வைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கு பொருள்களை வழங்கினா்.
விழாவில், திருப்பத்தூா் மாவட்ட வருவாய் அலுவலா் தங்கையா பாண்டியன், மாவட்ட வட்ட வழங்கல் அலுவலா் விஜயன், ஆம்பூா் வட்டாட்சியா் அனந்தகிருஷ்ணன், வட்ட வழங்கல் அலுவலா் செல்வராஜ், திமுக ஒன்றியச் செயலாளா்கள் அகரம்சேரி ப.ச.சுரேஷ்குமாா், கள்ளூா் ரவி, பொதுக்குழு உறுப்பினா் எம்.டி.சீனிவாசன், மாவட்ட விவசாய தொழிலாளா் அணி அமைப்பாளா் மு.பழனி, மாவட்ட ஆதிதிராவிடா் நலக்குழு அமைப்பாளா் சே.குமாா், போ்ணாம்பட்டு தெற்கு ஒன்றிய திமுக நிா்வாகிகள் சிவக்குமாா், சேகா், மாசிலாமணி, பொன்.ராசன்பாபு, முரளி, சங்கா் ஆகியோா் கலந்து கொண்டனா்.