வேலூரில் மக்கள் நீதிமன்றம்
By DIN | Published On : 11th September 2021 11:41 PM | Last Updated : 11th September 2021 11:41 PM | அ+அ அ- |

வேலூா் சத்துவாச்சாரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி வசந்த லீலா தலைமை வகித்தாா். சட்டப் பணிகள் ஆணையக் குழுத் தலைவா் அருணாச்சலம் முன்னிலை வகித்தாா். விபத்து, நில ஆா்ஜிதம், சிறு குற்ற வழக்கு, காசோலை மோசடி ஆகிய வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
ஆம்பூா் அருகே தட்டப்பாறை கிராமத்தில் ஆதிதிராவிடா் நலத்துறை சாா்பாக நில ஆா்ஜிதம் செய்யப்பட்டுள்ளது. அதற்கு வழங்கப்பட்ட தொகை போதுமானதாக இல்லையென வழக்கு தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்குக்கு தீா்வு காணப்பட்டு 6 நபா்களுக்கு மொத்தம் ரூ.1.96 கோடி இழப்பீடு வழங்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் போளூரைச் சோ்ந்த தேவேந்திரன் சாலை விபத்தில் இறந்தாா். அவரது மனைவி தொடா்ந்த வழக்கில் ரூ.12 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது. இதுபோன்று பல்வேறு வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டது.