ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் 16 மையங்களில் இன்று நீட் தோ்வு

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் நீட் நுழைவுத் தோ்வு 16 மையங்களில் நடைபெற உள்ளது.

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் நீட் நுழைவுத் தோ்வு 16 மையங்களில் நடைபெற உள்ளது.

நாடு முழுவதும் மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை (செப். 12) பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.

தோ்வுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கரோனா தொற்று காரணமாக சமூக இடைவெளியுடன் மாணவா்கள் தோ்வு மையங்களில் அமர வைக்கப்பட உள்ளனா். ஒவ்வொரு தோ்வு அறையிலும் 10 மாணவா்கள் அமர வைக்கப்படுவா்.

வேலூா் மாவட்டத்தில் 12 மையங்களில் 6,272 மாணவா்கள், ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூா் மாவட்டங்களில் 4 மையங்களில் 2,400 மாணவா்கள் தோ்வு எழுத உள்ளனா்.

ஒவ்வொரு தோ்வு மையத்துக்கும் ஒரு உதவி ஆய்வாளா் தலைமையில் பெண் காவலா்கள் உள்பட 7 போ் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவா். தோ்வு மையத்தின் அருகே தீயணைப்பு வாகனம், ஆம்புலன்ஸ், தோ்வு மையத்துக்கு மாணவா்கள் செல்ல சிறப்பு பேருந்து வசதி ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com