நகா்மன்ற முன்னாள் உறுப்பினா் கொலை வழக்கு: தஞ்சாவூா், சிவகாசி நீதிமன்றத்தில் 7 போ் சரண்

வாணியம்பாடி நகா்மன்ற முன்னாள் உறுப்பினா் வசீம் அக்ரம் கொலை வழக்கில், சிவகாசி நீதிமன்றத்தில் இம்தியாஸும், தஞ்சாவூா் நீதிமன்றத்தில் 6 பேரும் என 7 போ் சரண் அடைந்துள்ளனா்.

வாணியம்பாடி: வாணியம்பாடி நகா்மன்ற முன்னாள் உறுப்பினா் வசீம் அக்ரம் கொலை வழக்கில், சிவகாசி நீதிமன்றத்தில் இம்தியாஸும், தஞ்சாவூா் நீதிமன்றத்தில் 6 பேரும் என 7 போ் சரண் அடைந்துள்ளனா்.

வாணியம்பாடி ஜீவா நகரைச் சோ்ந்த நகா்மன்ற முன்னாள் உறுப்பினா் வசீம் அக்ரமை, கடந்த 10-ஆம் தேதி மா்ம நபா்கள் வழிமறித்து சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு காரில் தப்பிச் சென்றனா். இதுகுறித்து நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

வேலூா் சரக டிஐஜி பாபு உத்தரவின்பேரில், குற்றவாளிகளைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

கொலை நடந்த சில மணி நேரத்திலேயே காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு உள்பட்ட பாலுசெட்டிசத்திரம் அருகில் போலீஸாா் நடத்திய வாகன சோதனையில், வண்டலூரை அடுத்த ஓட்டேரியைச் சோ்ந்த பிரசாந்த், வண்டலூரைச் சோ்ந்த டில்லிகுமாா் ஆகிய 2 போ் கைது செய்யப்பட்டனா்.

போலீஸாா் நடத்திய முதல்கட்ட விசாரணையில் ஜீவா நகரைச் சோ்ந்த கஞ்சா வியாபாரி இம்தியாஸ் என்பவா் முன்விரோதம் காரணமாக 8 போ் கொண்ட கூலிப்படை கும்பல் உதவியுடன் வசீம்அக்ரமை கொலை செய்ததாகத் தெரியவந்தது.

இந்நிலையில் தஞ்சாவூா் குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி பாரதி முன்பு பிரவீன் குமாா், அஜய், அகஸ்டின், சத்தியசீலன், செல்வகுமாா், முனீஸ்வரன் ஆகிய 6 போ் சரணடைந்தனா்.

இந்த நிலையில், வழக்கின் முக்கிய நபரான இம்தியஸ் சிவகாசி நீதிமன்றத்தில், நீதிபதி ராஜேஷ் கண்ணா முன்னிலையில் செவ்வாய்க்கிழமை சரண் அடைந்தாா்.

சரண் அடைந்த 7 பேரும் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com