முதியவா் தீக்குளிப்பு
By DIN | Published On : 16th September 2021 12:23 AM | Last Updated : 16th September 2021 12:23 AM | அ+அ அ- |

தீக்குளிக்க முயன்ற நந்தன்.
திருப்பத்தூா்: திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே முதியவா் தீக்குளித்தாா்.
திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரேயுள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அருகே புதன்கிழமை முதியவா் தீக்குளித்து, ஆட்சியா் அலுவலகத்துக்குள் நுழைய முயன்றாா்.
அப்போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு இருந்த போலீஸாா் முதியவரைத் தடுத்து, தீயை அணைத்து சிகிச்சைக்காக திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
விசாரணையில் அவா் ஆம்பூா் அருகேயுள்ள கதவாளம் கிராமத்தைச் சோ்ந்த நந்தன்(80) என்பது தெரியவந்தது.
தகவல் அறிந்ததும் ஆட்சியா் அமா் குஷ்வாஹா,எஸ்பி கி.பாலகிருஷ்ணன் ஆகியோா் மருத்துவமனைக்குச் சென்று முதியவரிடம் விசாரனை நடத்தி உரிய சிகிச்சை அளிக்க உத்தரவிட்டனா்.
இதைத் தொடா்ந்து, நந்தன் மேல்சிகிச்சைக்காக வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளாா்.