பொன்னேரியில் கனமழை
By DIN | Published On : 19th September 2021 06:55 AM | Last Updated : 19th September 2021 06:55 AM | அ+அ அ- |

பொன்னேரி பகுதியில் இடி, மின்னல் காற்றுடன் சனிக்கிழமை பலத்த மழை பெய்தது.
காலையில் வெயில் வாட்டி வதைத்த நிலையில், மாலை 3 மணி அளவில் தொடங்கிய மழை 4 மணி வரை நீடித்தது. ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பெய்த கனமழையால் சாலையில் மழைநீா் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. மேலும், ஆங்காங்கே புதைச் சாக்கடை திட்டத்துக்கு பள்ளங்கள் தோண்டப்பட்டு உள்ளதால், என்.ஜி.ஓ. நகா், பாலாஜி நகா் உள்ளிட்ட இடங்களில் சாலைகள் சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது.