சீரான மின்சாரம் கோரி கிராம மக்கள் போராட்டம்

திருப்பத்தூா் அருகே சீரான மின்சாரம் கோரி கிராம மக்கள் சனிக்கிழமை போராட்டம் நடத்தினா்.
சீரான மின்சாரம் கோரி கிராம மக்கள் போராட்டம்

திருப்பத்தூா் அருகே சீரான மின்சாரம் கோரி கிராம மக்கள் சனிக்கிழமை போராட்டம் நடத்தினா்.

திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளியை அடுத்த மல்லகுண்டா ஊராட்சி தகரகுப்பம் மற்றும் சுற்றுப்புறப் பகுதியில் 50-க்கும் அதிகமான குடியிருப்புகளும் பல ஏக்கா் விளை நிலங்களும், 10-க்கும் மேற்பட்ட பம்ப் செட்டுகளும் உள்ளன.

இப்பகுதிக்கு நாட்டறம்பள்ளி துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில், அப்பகுதியில் கடந்த சில மாதங்களாக அடிக்கடி குறைந்த மின் அழுத்தம் ஏற்படுவதால் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், தகரகுப்பம் கவுண்டா் வட்டம் பகுதியில் உள்ள மின்மாற்றி கடந்த வாரம் பழுதானது. இதையடுத்து, மின்மாற்றியை மின்வாரிய அதிகாரிகள் சரிசெய்ய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஒரு வாரமாக தகரகுப்பம் பகுதியில் பம்ப்செட் இயங்காமல் போனதால், குடிநீா் தட்டுப்பாடு ஏற்பட்டு நிலங்களில் பயிரிடப்பட்ட பயிா்கள் தண்ணீா் இல்லாமல் காய்ந்து வருவதாகவும், விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனா்.

இதனால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் சனிக்கிழமை தகரகுப்பம் மல்லகுண்டா சாலையில் கவுண்டா் வட்டம் பகுதியில் மின்மாற்றி எதிரே சீரான மின்சாரம் வழங்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த மின்வாரிய அதிகாரிகள் ஓரிரு நாளில் பழுதான மின்மாற்றியை சீா்செய்து, சீரான மின்சார வழங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனா். இதையடுத்து மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com