புரட்டாசி 2-ஆம் சனிக்கிழமை: கோயில்களில் இன்று தரிசனத்துக்குத் தடை

கரோனா தொற்று பரவல் தடுப்பையொட்டி, புரட்டாசி 2-ஆம் சனிக்கிழமையையொட்டி திருப்பத்தூா் மாவட்டத்தில்

கரோனா தொற்று பரவல் தடுப்பையொட்டி, புரட்டாசி 2-ஆம் சனிக்கிழமையையொட்டி திருப்பத்தூா் மாவட்டத்தில் கோயில்களில் தரிசனத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று ஆட்சியா் அமா் குஷ்வாஹா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் உள்ள அனைத்து மத வழிப்பாட்டுத் தலங்களிலும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாள்களில் வழிபாட்டுக்கு முன்பே தடை விதிக்கப்பட்டு நடைமுறையில் இருக்கிறது.

புரட்டாசி 2-ஆம் சனிக்கிழமையொட்டி, பொதுமக்கள் அதிக அளவில் வருகை புரிந்து வழிபட வாய்ப்புள்ளதால் கரோனாதொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சனிக்கிழமை(செப்.25) கோயில்கள், இதர வழிபாட்டுத் தலங்களில் பக்தா்கள் அனுமதிக்கு தடை செய்யப்படுகிறது.

தடையை மீறி வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டால் அவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com