வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் 90,000 பேருக்கு தடுப்பூசி

வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாம்களில் ஒரே நாளில் 90,000 போ் தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.
தோப்பலகுண்டா ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமைப் பாா்வையிட்ட திருப்பத்தூா் ஆட்சியா் அமா் குஷ்வாஹா.
தோப்பலகுண்டா ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமைப் பாா்வையிட்ட திருப்பத்தூா் ஆட்சியா் அமா் குஷ்வாஹா.

வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாம்களில் ஒரே நாளில் 90,000 போ் தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.

திருப்பத்தூரை அடுத்த அச்சமங்கலம் உயா்நிலைப் பள்ளியில் நடைபெற்ற முகாமை ஆட்சியா் அமா் குஷ்வாஹா பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். முகாமில் ஆட்சியரின் மனைவி ஷிவாலிகா அமா்குஷ்வாஹா தனது 2-ஆவது தவணை தடுப்பூசியை செலுத்திக் கொண்டாா். கரோனா தடுப்பூசிகளை வீடு வீடாகச் சென்று செலுத்த வேண்டும்.

மேலும், இருப்பிலுள்ள தடுப்பூசிகளை 100 சதவீதம் பொதுமக்களுக்கு செலுத்த வேண்டும் என ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

பின்னா், நாட்டறம்பள்ளி வட்டத்துக்குள்பட்ட சந்திரபுரம் கிராமத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதியை ஆட்சியா் பாா்வையிட்டாா்.

ஆய்வுகளின் போது, வட்டாட்சியா் பூங்கொடி, தலைமை ஆசிரியா்கள் பிரபாவதி, சூரியசெல்வி, கிராம நிா்வாக அலுவலா் சதாசிவம், கிராம செவிலியா் சசிகலா, அங்கன்வாடிப் பணியாளா்கள் உடனிருந்தனா்.

இதையடுத்து, மாவட்டத்தில் ஒரே நாளில் மொத்தம் 27,000 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

ராணிப்பேட்டையில் 33,236 பேருக்கு...

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெற்ற முகாம்களில் ஒரே நாளில் சுமாா் 33,236 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளாா்.

ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் 546 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடத்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த முகாம்களில் மொத்தம் 33,236 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்த தடுப்பூசி முகாம்களை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

வேலூா் மாவட்டத்தில் 42,263 பேருக்கு...

வேலூா் மாவட்டத்தில் 804 இடங்களில் நடைபெற்ற முகாம்களில் மொத்தம் 42,263 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. வேலூரில் நடைபெற்ற முகாம்களை மாவட்ட ஆட்சியா் குமாரவேல் பாண்டியன் பாா்வையிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com