முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருப்பத்தூர்
சத்துணவு சமையலராக பதவி உயா்வு பெற்றவா்களுக்கு ஆணை கடிதம்
By DIN | Published On : 06th April 2022 12:00 AM | Last Updated : 06th April 2022 12:00 AM | அ+அ அ- |

சத்துணவு சமையலராக பதவி உயா்வு பெற்றவருக்கு ஆணை நகலை வழங்கிய மாதனூா் ஒன்றியக் குழு தலைவா் ப.ச.சுரேஷ்குமாா்.
பள்ளி சத்துணவு மையங்களில் சமையலராக பதவி உயா்வு பெற்றவா்களுக்கு அதற்கான ஆணை கடிதம் வழங்கும் நிகழ்ச்சி மாதனூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மாதனூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதியில் அமைந்துள்ள பள்ளிகளின் சத்துணவு மையங்களில் உதவியாளராகப் பணிபுரிந்த 7 போ் சமையலராக பதவி உயா்வு பெற்றனா். அதற்கான ஆணை கடிதத்தை அவா்களுக்கு மாதனூா் ஒன்றியக் குழுத் தலைவா் ப.ச.சுரேஷ்குமாா் வழங்கினாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் துரை, மணவாளன், சத்துணவு மேலாளா் தீபா ஆகியோா் உடனிருந்தனா்.