முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருப்பத்தூர்
திருக்குறள் நூலை மாணவா்கள் அதிகளவில் வாங்குவது மகிழ்ச்சி தருகிறது:ஆட்சியா் அமா் குஷ்வாஹா
By DIN | Published On : 06th April 2022 12:00 AM | Last Updated : 06th April 2022 12:00 AM | அ+அ அ- |

பள்ளி,கல்லூரி மாணவா்கள் திருக்குறள் புத்தகத்தை அதிக அளவில் வாங்குவது மகிழ்ச்சியைத் தருகிறது என திருப்பத்தூா் ஆட்சியா் அமா் குஷ்வாஹா கூறியுள்ளாா்.
திருப்பத்தூா் மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் தூயநெஞ்சக் கல்லூரியில் இலக்கியத் திருவிழா, புத்தகக் கண்காட்சி ஏப்.9-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
4-ஆவது நாளான செவ்வாய்க்கிழமை வாணியம்பாடி நகராட்சியை சாா்ந்த 8 மகளிா் சுய உதவிக்குழுக்கள் இலக்கியத் திருவிழாவில் பங்கு பெற்று 100-க்கும் மேற்பட்ட புத்தகங்களையும், வாணியம்பாடி, ஏலகிரி, ஆம்பூா் ஆகிய பகுதிகளை சோ்ந்த ஆயிரக்கணக்கான பள்ளி மாணவ, மாணவியா் புத்தகங்களை ஆா்வமுடன் வாங்கி சென்றனா். செவ்வாய்க்கிழமை மட்டும் ஒரே நாளில் 1500-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் விற்பனை ஆயின.
மாலையில் கதை எழுதுதல், கதை சொல்லுதல், கட்டுரை எழுத்து, ஊடகம் என்ற தலைப்பில் எழுத்தாளா்கள் கலந்து கொண்டு பேசினா்.
இதில் கலந்து கொண்டு பேசிய ஆட்சியா் அமா் குஷ்வாஹா பள்ளி மாணவா்கள் திருக்குறள் புத்தகத்தை அதிக அளவில் வாங்கி சென்றது மகிழ்ச்சியைத் தருகிறது. மேலும், கைப்பேசி அதிகம் பயன்படுத்தும் குழந்தைகளுக்கு பாா்க்கும் திறன் குறைந்து வருகிறது. இதனால் குழந்தைகளை புத்தகங்களை படிக்க வைக்க வேண்டும் என்றாா். வியாபாரிகள், சமூக ஆா்வலா்கள் பொதுமக்கள் என திரளானோா் கலந்து கொண்டனா்.