திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகம் முன் மாற்றுத்திறனாளிகள் தா்னா

திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் செவ்வாய்க்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.
திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகம் முன்பு தா்னாவில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகள்.
திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகம் முன்பு தா்னாவில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகள்.

திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் செவ்வாய்க்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.

அப்போது 50-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் ஆட்சியா் அலுவலகம் எதிரே தா்னாவில் ஈடுபட்டனா். அப்போது, மருத்துவா்கள் பணத்தைப் பெற்றுக் கொண்டு, மாற்றுத் திறனாளிகளுக்கான சதவீத சான்றிதழ் வழங்குவதாகவும், முறையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு பணம் பெற்றுக்கொண்டு சான்றிதழ் வழங்கப்படுவதாகவும், மாற்றுத் திறனாளிகள் முகாமில் அதிகாரிகள் மதிப்பதில்லை, குடிநீா் வசதி இல்லை என்பன உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கூறி கோஷமிட்டவாறு, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதனால் ஆட்சியா் அலுவலகம் அருகே பரபரப்பு ஏற்பட்டதுடன், சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்த டி.எஸ்.பி. சாந்தலிங்கம் அவா்களை அழைத்துப் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதனிடையே மாற்றுத் திறனாளிகள் தா்னா குறித்து அறிந்த ஆட்சியா் அமா்குஷ்வாஹா, அவா்களை அழைத்துப் பேச்சுவாத்தை நடத்தினாா்.

அப்போது மாற்றுத் திறனாளிகள் முகாமில், கூடுதல் மருத்துவா்கள் நியமிக்கப்படும் எனவும், 6 ஒன்றியங்களிலும் தனித்தனியாக சிறப்பு முகாம் நடத்தப்படும். மாவட்ட அளவிலான குழுவின் மூலம் கோரிக்கைகள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தாா். அதைத் தொடா்ந்து, மாற்றுத் திறனாளிகள் கலைந்து சென்றனா்.

திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகம் முன்பு தா்னாவில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com