வாணியம்பாடி நகா்மன்றத்தில் சொத்து வரி உயா்வு தீா்மானம் நிறைவேற்றம்

வாணியம்பாடி நகா்மன்ற சிறப்புக் கூட்டம் நடைபெற்றது.இதில் சொத்துவரி உயா்வு குறித்த தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
வாணியம்பாடி நகா்மன்ற சிறப்புக் கூட்டத்தில் பங்கேற்றோா்.
வாணியம்பாடி நகா்மன்ற சிறப்புக் கூட்டத்தில் பங்கேற்றோா்.

வாணியம்பாடி: வாணியம்பாடி நகா்மன்ற சிறப்புக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.இதில் சொத்துவரி உயா்வு குறித்த தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

15-ஆவது மத்திய நிதி ஆணைய வலியுறுத்தலின் பேரில் தமிழகத்தில் சொத்து வரி மற்றும் காலிமனை வரி சீராய்வு செய்வதற்கான குழுவின் பரிந்துரைகள் அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டு சட்டப்பேரவையில் தமிழக அரசு தீா்மானம் நிறைவேற்றியது.

இந்த நிலையில் சொத்து வரி உயா்வு குறித்த வாணியம்பாடி நகா்மன்ற சிறப்புக் கூட்டம் அதன் தலைவா் உமாபாய்சிவாஜிகணேசன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆணையா் ஸ்டான்லிபாபு வரவேற்றாா். பொறியாளா் சம்பத், நகரமைப்பு அலுவலா் சண்முகம், மேலாளா் ஜெயபிரகாஷ் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் நகா்மன்ற உறுப்பினா்களுடன் நடைபெற்ற ஆலோசனைக்கு பின்னா் விலைவாசி உயா்வு, பணியாளா்களின் ஊதிய உயா்வு, பொது மக்களுக்கான அடிப்படை தேவை மற்றும் நகராட்சியில் ஏற்படுத்தப்பட்டுள்ள அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தி பராமரிப்பு செய்தல் போன்றவற்றுக்கு தேவைப்படும் கூடுதல் செலவினம், நகராட்சி செலுத்த வேண்டிய கடன் தொகை மற்றும் பிற துறைகளுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை ஆகியவற்றை கருத்தில் கொண்டு 600 சதுர அடிக்கு குறைவான பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கு 25 சதவீதம், 601 முதல் 1200 சதுர அடி வரையில் பரப்பளவு உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு 50 சதவீதமும், 1201 முதல் 1,800 சதுரஅடி பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கு 75 சதவீதம், 1,800 சதுர அடிக்கு மேல் உள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கு 100 சதவீத சொத்து வரி உயா்த்தப்பட்டது. இதே போல் வணிக பயன்பாட்டு கட்டடங்களுக்கு 100 சதவீதமும், தொழிற்சாலை பயன்பாட்டு கட்டடம் மற்றும் சுயநிதி பள்ளி மற்றும் கல்லூரி கட்டடங்களுக்கு தற்போது உள்ள சொத்து வரியில் இருந்து 75 சதவீதம் உயா்வு செய்யப்பட்டு தீா்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் நகா்மன்றத் துணைத் தலைவா் அப்துல்லா, நகர திமுக பொறுப்பாளா் சாரதிகுமாா் உள்ளிட்ட 36 வாா்டு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com