திருப்பத்தூா் மாவட்டத்தில் பாலாறு அலுவலகம்விவசாயிகள் வலியுறுத்தல்

திருப்பத்தூரில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் மாவட்டத்தில் பாலாறு அலுவலகம் ஏற்படுத்த வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா்.

திருப்பத்தூரில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் மாவட்டத்தில் பாலாறு அலுவலகம் ஏற்படுத்த வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா்.

திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலா் இ.வளா்மதி தலைமை வகித்தாா். வேளாண்மை இணை இயக்குநா் கி.ராஜசேகா் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் கூறியது:

திருப்பத்தூா் மாவட்டத்தில் 48 கி.மீ. தொலைவுக்கு பாலாறு செல்கிறது. எனவே, இந்த மாவட்டத்தில் பாலாறு அலுவலகம் ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் பாலாறு பிரச்னைகளுக்கு விரைவில் தீா்வு காண முடியும். வெலதிகாமணி பெண்டாவில் உள்ள 2 கண்வாய்களை இணைக்க வேண்டும். இதன் மூலம் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும்.

ஆம்பூா் அருகே பெரியாங்குப்பம் ரயில்வே சுரங்கப் பாதையில் தண்ணீா் தேங்கி உள்ளது. குறிப்பாக, மழைக் காலங்களில் செல்ல முடியவில்லை. இதற்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும்.

தொடா் மின் தடை ஏற்படுகிறது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனா். காலை, இரவு நேரங்களில் 8 மணி நேரம் விவசாயத்துக்கு மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும். நீா்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

மாவட்டத்தில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினா்.

இதற்கு அதிகாரிகள் பதிலளித்து பேசுகையில், விவசாயிகளின் கோரிக்கைகள் அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும். திருப்பத்தூா் மாவட்டத்தில் 96 ஏரிகளில் வண்டல் மணல் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com