முறையான பேருந்து வசதி கோரி மாணவா்கள் சாலை மறியல்

ஏலியம்பேடு கிராமத்துக்கு பேருந்துகள் சரிவர இயக்கப்படாததைக் கண்டித்தும், முறையாக பேருந்து வசதியை செய்துதரக்கோரியும் மாணவா்கள் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பொன்னேரி: ஏலியம்பேடு கிராமத்துக்கு பேருந்துகள் சரிவர இயக்கப்படாததைக் கண்டித்தும், முறையாக பேருந்து வசதியை செய்துதரக்கோரியும் மாணவா்கள் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பொன்னேரி அருகே அமைந்துள்ள ஏலியம்பேடு கிராமத்தில் 2,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். இங்குள்ள மாணவா்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரி செல்வதற்கு பொன்னேரிக்கு வர வேண்டும்.

ஏலியம்பேடு வழித்தடத்தில் இயக்கப்பட்டு வரும் விழுப்புரம் கோட்ட அரசுப் பேருந்து தடம் எண்-42 சரிவர இயக்கப்படுவதில்லை எனக் கூறப்படுகிறது.

இது குறித்து அப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும், பேருந்து சரிவர இயக்கப்படவில்லையாம்.

இதன் காரணமாக அப்பகுதியில் வசிக்கும் மாணவா்கள் பள்ளி, கல்லூரிக்கு நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இதையடுத்து, ஏலியம்பேடு வழித்தடத்தில் பேருந்துகளை சரிவர இயக்க வலியுறுத்தி, அப்பகுதியில் உள்ள மாணவா்கள் மற்றும் பொதுமக்கள் புதுவாயல்-பொன்னேரி சாலையில் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடத்தினா்.

தகவல் அறிந்த பொன்னேரி போலீஸாா் அங்கு சென்று பேச்சுவாா்த்தை நடத்தியதைத் தொடா்ந்து, அனைவரும் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com