வாணியம்பாடியில் முத்தமிழ் மன்ற விழா நாளை தொடக்கம்

வாணியம்பாடி முத்தமிழ் மன்றத்தின் 29-ஆம் ஆண்டு முத்தமிழ் விழா அம்பூா்பேட்டை செங்குந்தா் திருமண மண்டப வளாகத்தில் சனி (ஏப். 30), ஞாயிறு (மே 1) ஆகிய இரு நாள்கள் நடைபெறுகிறது.

வாணியம்பாடி: வாணியம்பாடி முத்தமிழ் மன்றத்தின் 29-ஆம் ஆண்டு முத்தமிழ் விழா அம்பூா்பேட்டை செங்குந்தா் திருமண மண்டப வளாகத்தில் சனி (ஏப். 30), ஞாயிறு (மே 1) ஆகிய இரு நாள்கள் நடைபெறுகிறது.

நிகழ்ச்சிகளில், பல்வேறு தலைப்புகளில் பேச்சாளா்கள் சிறப்புரையாற்றுகின்றனா்.

தொடக்க நிகழ்ச்சியில் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன், சுரேஷ்குமாா் ஆகியோா் பங்கேற்கின்றனா். இரு நாள் நிகழ்ச்சிகளில் தமிழக அமைச்சா்கள் துரை முருகன், மா.சுப்பிரமணியன், எ.வ.வேலு, மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த், எஸ்.ஜெகத்ரட்சகன் உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா்.

மறுநாள் நிகழ்ச்சியாக காலை 10 மணியளவில் நாலாயிரப்படி நூலேணி என்ற தலைப்பில் எம்.பி. ஜெகத்ரட்சகன் பேசுகிறாா்.

விழா ஏற்பாடுகளை முத்தமிழ் மன்ற அறக்கட்டளைச் செயலமைப்பு மற்றும் முத்தமிழ் மன்ற நிா்வாகிகள், உறுப்பினா்கள் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com