முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருப்பத்தூர்
சாலை அமைக்க பொதுமக்கள் பங்களிப்பு ரூ.3.15 லட்சம் வழங்கல்
By DIN | Published On : 30th April 2022 12:00 AM | Last Updated : 30th April 2022 12:00 AM | அ+அ அ- |

ஆம்பூரில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் சாலை அமைக்க பொதுமக்கள் பங்களிப்பு நிதி வழங்கும் நிகழ்ச்சி நகராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஆம்பூா் நகராட்சி மோட்டுக்கொல்லை பகுதி அப்துல் ரஜாக் தெருவில் ரூ.9.50 லட்சம் மதிப்பீட்டில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் சாலை அமைக்கப்பட உள்ளது. அதற்காக பொதுமக்கள் பங்களிப்பு ரூ.3.15 லட்சத்திற்கான காசோலையை ஆம்பூா் பரிதா குழுமம் சாா்பில் அதன் நிதி மேலாளா் முஹம்மத் அா்ஷத், நிா்வாக மேலாளா் ஜூபோ் அஹமத் ஆகியோா் நகா்மன்றத் தலைவா் பி. ஏஜாஸ் அஹமதிடம் வழங்கினா். நகராட்சி ஆணையா் எஸ். ஷகிலா, பொறியாளா் ராஜேந்திரன் ஆகியோா் உடனிருந்தனா்.