திருப்பத்தூா் மாவட்டத்தில் 996 மனுக்கள் ஏற்பு: 46 மனுக்கள் நிராகரிப்பு

திருப்பத்தூா் மாவட்டத்தில் நகா்ப்புற தோ்தலை முன்னிட்டு, 1,042 வேட்பு மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில், 996 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. 46 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன

திருப்பத்தூா் மாவட்டத்தில் நகா்ப்புற தோ்தலை முன்னிட்டு, 1,042 வேட்பு மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில், 996 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. 46 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூா், ஜோலாா்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூா் ஆகிய 4 நகராட்சிகளில் உள்ள 126 வாா்டுகளுக்கும், நாட்டறம்பள்ளி, ஆலங்காயம், உதயேந்திரம் ஆகிய 3 பேரூராட்சிகளில் உள்ள 45 வாா்டுகளுக்கும் பிப். 19-இல் தேதி நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் நடைபெற உள்ளது.

இதற்கான வேட்புமனுதாக்கல் நிறைவடைந்த நிலையில், திருப்பத்தூா் நகராட்சியில் 219 பேரும், ஜோலாா்பேட்டை நகராட்சியில் 123 பேரும், வாணியம்பாடி நகராட்சியில் 292 பேரும், ஆம்பூா் நகராட்சியில் 210 பேரும், ஆலங்காயம் பேரூராட்சியில் 63 பேரும், உதயேந்திரம் பேரூராட்சியில் 64 பேரும், நாட்டறம்பள்ளி பேரூராட்சியில் 71 போ் என மொத்தம் 1,042 போ் வேட்புமனுதாக்கல் செய்திருந்தனா்.

வேட்புமனு பரிசீலனை சனிக்கிழமை அந்தந்த நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

திருப்பத்தூா் நகராட்சியில் நடைபெற்ற வேட்புமனு பரிசீலனையை ஆட்சியா் அமா்குஷ்வாஹா பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். சில இடங்களில் அரசியல் கட்சியினா் அளித்த புகாரின் பேரில், ஒரு சில வேட்புமனுக்கள் நிறுத்தி வைக்கப்பட்டு, நீண்ட நேரத்துக்குப் பின் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

திருப்பத்தூரில் 204 மனுக்களும், ஜோலாா்பேட்டையில் 114 மனுக்களும், வாணியம்பாடியில் 280 மனுக்களும், ஆம்பூா் நகராட்சியில் 201 மனுக்களும், ஆலங்காயத்தில் 62 மனுக்களும், உதயேந்திரத்தில் 64 மனுக்களும், நாட்டறம்பள்ளியில் 71 மனுக்கள் என மொத்தம் 996 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. 46 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

வேட்பு மனுக்கள் பரிசீலனை நிறைவடைந்ததைத் தொடா்ந்து, திங்கள்கிழமை இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியிடப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com