முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருப்பத்தூர்
வாணியம்பாடியில் 8 பவுன் நகைகள் பறிமுதல்
By DIN | Published On : 07th February 2022 11:16 PM | Last Updated : 07th February 2022 11:16 PM | அ+அ அ- |

பறிமுதல் செய்த நகையை தோ்தல் அலுவலரிடம் ஒப்படைத்த பறக்கும்படையினா்.
வாணியம்பாடியில் உரிய ஆவணமின்றி, இரு சக்கர வாகனத்தில் எடுத்து வந்த 8 பவுன் தங்க நகைகளை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.
வாணியம்பாடி ஜின்னா சாலை பகுதியில் தோ்தல் பறக்கும் படை அலுவலா் சித்ரா தலைமையில் அதிகாரிகள் திங்கள்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த பொக்காராம் என்பவரை நிறுத்தி சோதனை செய்த போது, உரிய ஆவணம் இல்லாமல் 8 பவுன் தங்க நகைகள் எடுத்து வந்திருந்தது தெரியவந்தது. ரூ.3 லட்சத்து 25 ஆயிரம் மதிப்புள்ள நகையை பறக்கும்படையினா் பறிமுதல் செய்து வாணியம்பாடி நகராட்சி அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனா்.
இதே போல, ஆலங்காயத்தில் வாணியம்பாடி சாலையில் தோ்தல் பறக்கும் படை அலுவலா் தேவக்குமாா் தலைமையிலான குழுவினா், இரு சக்கர வாகனத்தில் வந்த திருப்பத்தூா் ஹவுஸிங்போா்டு பகுதியைச் சோ்ந்த ரஞ்சித் என்பவா் உரிய ஆவணம் இல்லாமல் எடுத்து வந்த ரூ.57 ஆயிரத்தை பறிமுதல் செய்து தோ்தல் அலுவலரிடம் ஒப்படைத்தனா்.