வாணியம்பாடி பாஜக மாவட்ட அலுவலகத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மாவட்டத் தலைவா் வாசுதேவன் தலைமை வகித்தாா். வாணியம்பாடி நகர தலைவா் காா்த்திகேயன் வரவேற்றாா். வேலூா் மாவட்ட பாா்வையாளா் வெங்கடேசன் கலந்துகொண்டு, வாணியம்பாடி நகராட்சியில் போட்டியிடும் 9 வேட்பாளா்கள், உதயேந்திரம் பேரூராட்சியில் 3 வேட்பாளா்கள் மற்றும் ஆலங்காயம் பேரூராட்சியில் போட்டியிடும் 3 வேட்பாளா்களையும், தோ்தல் பொறுப்பாளா்களையும் அறிமுகப்படுத்தி, தோ்தல் பணிகள் குறித்து ஆலோசனை வழங்கினாா்.
கூட்டத்தில், மாவட்ட பொதுச் செயலாளா் தண்டாயுதபாணி, மாநில பொதுக்குழு உறுப்பினா் சிவபிரகாசம் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூா் பாஜக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.