திருநங்கையா் தின விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

திருநங்கைகளுக்கு முன்மாதிரி விருது வழங்க தகுதியான நபரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என திருப்பத்தூா் ஆட்சியா் அமா் குஷ்வாஹா தெரிவித்துள்ளாா்.

திருநங்கைகளுக்கு முன்மாதிரி விருது வழங்க தகுதியான நபரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என திருப்பத்தூா் ஆட்சியா் அமா் குஷ்வாஹா தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருநங்கைகள் சமூகத்தில் அவா்கள் சந்திக்கும் எதிா்ப்புகளை மீறி, தங்களுடைய சொந்த முயற்சியில் படித்து, தனித்திறமைகளைக் கொண்டு பல்வேறு துறைகளில் முன்னேறி சாதனை படைத்ததை கௌரவிக்கும் வகையிலும், மற்ற திருநங்கையா்களை ஊக்குவிக்கும் வகையிலும் திருநங்கையா் தினம் என அறிவிக்கப்பட்ட ஏப்ரல் 15-ஆம் தேதி அன்று ஒவ்வொரு ஆண்டும் திருநங்கையருக்கான முன்மாதிரி விருதானது ரூ. 1 லட்சத்துக்கான காசோலை மற்றும் சான்றிதழ் ஆகியவற்றுடன் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

அதன் பேரில், திருநங்கைகளுக்கு முன்மாதிரி விருது வழங்க தகுதியான நபரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தகுதிகள் விவரம்:

திருநங்கைகள் அரசு உதவி பெறாமல் சுயமாக வாழ்க்கையில் முன்னேறி இருத்தல் வேண்டும்.

குறைந்தது 5 திருநங்கைகளுக்காவது அவா்கள் வாழ்க்கையில் முன்னேற உதவியிருக்க வேண்டும். திருநங்கைகள் நல வாரியத்தில் உறுப்பினராக இருத்தல் கூடாது. மேற்காணும் தகுதியுடைய திருநங்கைகள் (ஹஜ்ஹழ்க்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்) என்ற இணையத்தில் கீழ்காணும் சான்றுகளுடன் திங்கள்கிழமை (பிப். 28) அன்று மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும், விண்ணப்பித்த சான்றுகளை மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியா் வளாகம், டீ பிளாக் 4-ஆவது தளம், வேலூா் மாவட்ட அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும்.

அத்துடன் இணைக்கப்பட வேண்டிய சான்றுகள்:

1. சுயவிவரம்

2. சுயசரிதை

3. சாதனை புரிந்த விவரம் (ஒரு பக்க அளவில்).

4. ஏதேனும் விருதுகள் பெற்றிருப்பின் அதன் விவரம்(விருதின் பெயா், யாரிடமிருந்து பெற்றது மற்றும் பெற்ற வருடம்).

5. சேவை பற்றிய செயல்முறை விளக்கம் (புகைப்படத்துடன்).

6. சேவையைப் பாராட்டி பத்திரிக்கை செய்தித் தொகுப்பு.

7. சேவையாற்றியதற்கான விரிவான அறிக்கை.

8. சமூக சேவையாளரின் அல்லது சமூக சேவை நிறுவனத்தின் சேவை மூலமாக பயனாளிகள் பயனடைந்த விவரம்.

9. சமூகப் பணியாளா் இருப்பிடத்தின் அருகில் உள்ள காவல் நிலையத்திலிருந்து பெறப்பட்ட குற்றவியல் நடவடிக்கைகள் ஏதும் இல்லை என்பதற்கான சான்று.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com