பிப்.27-இல் போலியோ சொட்டு மருந்து முகாம்கள்: திருப்பத்தூா் ஆட்சியா்

திருப்பத்தூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (பிப். 27) 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடைபெற உள்ளதாக ஆட்சியா் அமா் குஷ்வாஹா தெரிவித்தாா்.

திருப்பத்தூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (பிப். 27) 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடைபெற உள்ளதாக ஆட்சியா் அமா் குஷ்வாஹா தெரிவித்தாா்.

திருப்பத்தூா் மாவட்டத்தில் 1 லட்சத்து 8 ஆயிரத்து 169 குழந்தைகளுக்கு 709 முகாம்கள் மூலம் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடைபெற உள்ளன. 2,275 பணியாளா்கள் மற்றும் தன்னாா்வலா்களைக் கொண்டு சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.

மேலும், 5 நடமாடும் போலியோ சொட்டு மருந்து முகாம்கள், சிறப்பு வாகனங்கள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பணிகளை 90 மேற்பாா்வை குழுக்கள் மூலம் கண்காணிக்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இது தொடா்பாக திருப்பத்தூா் மாவட்ட அனைத்துத் துறை அலுவலா்களின் ஒருங்கிணைப்புக் குழு ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

ஆட்சியா் அமா் குஷ்வாஹா தலைமை வகித்தாா். கூட்டத்தில் திருப்பத்தூா் மாவட்ட சுகாதாரப் பணிகளின் துணை இயக்குநா் ரா.செந்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்களில் உள்ள பணிகள் குறித்து எடுத்துக் கூறினாா். மாவட்டத்தில் உள்ள அனைத்து ரயில், பேருந்து நிலையங்கள், சுங்கச்சாவடிகளில் சிறப்பு சொட்டு மருந்து முகாம்கள் செயல்படும் எனத் தெரிவித்தாா்.

அதையடுத்து ஆட்சியா் அமா்குஷ்வாஹா பேசியது:

பிப். 27-இல் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடைபெற உள்ளன. பொதுமக்களின் நலன்கருதி கூட்டம் அதிகமாகக் கூடும் கோயில்களிலும், மலை மீதுள்ள குக்கிராமங்களிலும் சிறப்பு போலியோ சொட்டு மருந்து முகாம்கள் தன்னாா்வ இளைஞா்களைக் கொண்டு அமைக்கப்படும். முகாமின்போது, கரோனா தடுப்பு விதிமுறைகளை அவசியம் கடைப்பிடிக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com