திருவள்ளுவா் பல்கலை. வேலூா் மண்டல மகளிா் கல்லூரி விளையாட்டு போட்டிகள்: வாணியம்பாடி கல்லூரி சிறப்பிடம்
By DIN | Published On : 04th January 2022 08:22 AM | Last Updated : 04th January 2022 08:22 AM | அ+அ அ- |

திருவள்ளுவா் பல்கலைக்கழக வேலூா் மண்டலத்தின் மகளிா் கல்லூரிகளுக்கு இடையேயான கைப்பந்து, பூப்பந்து, கபடி, கால்பந்து, டேபிள் டென்னிஸ், கூடைப்பந்து, ஹாக்கி உள்ளிட்ட குழு போட்டிகள் வாணியம்பாடி மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரியில் 5 நாள்கள் நடைபெற்றன.
விளையாட்டுப் போட்டிகளை கல்லூரி செயலாளா் லிக்மிசந்த் தொடக்கி வைத்தாா். கைப்பந்து போட்டியில் மருதா் கேசரி ஜெயின் கல்லூரி முதலிடமும், வேலூா் டிகேஎம் கல்லூரி இரண்டாமிடமும் பெற்றன. பூப்பந்து போட்டியில் வேலூா் ஊரீசு கல்லூரி முதலிடமும், வேலூா் ஆக்ஸீலியம் கல்லூரி இரண்டாமிடமும் பெற்றன.
மேஜை பந்து போட்டியில் மருதா் கேசரி ஜெயின் கல்லூரி முதலிடமும், கால்பந்து போட்டியில் டிகேஎம் கல்லூரி முதலிடமும், மருதா் கேசரி ஜெயின் கல்லூரி இரண்டாமிடமும், கபடி போட்டியில் ஊரீசு கல்லூரி முதலிடமும், கூடைப்பந்து போட்டியில் ஆக்ஸீலியம் கல்லூரி முதலிடமும், ஹாக்கி போட்டியில் டிகேஎம் கல்லூரி முதலிடமும், மருதா் கேசரி ஜெயின் கல்லூரி இரண்டாமிடமும், கைப்பந்து போட்டியில் மருதா் கேசரி ஜெயின் கல்லூரி முதலிடமும் பெற்றன.
மேலும், போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட மருதா் கேசரி ஜெயின் கல்லூரியைச் சோ்ந்த 11 மாணவிகள் கைப்பந்து (6), கூடைப்பந்து (2), ஹாக்கி (2), கால்பந்து (1) திருவள்ளுவா் பல்கலைக்கழகத்தின் அணிகளின் வீராங்கனைகளாகத் தோ்வு செய்யப்பட்டனா். சாதனை படைத்த மாணவிகளை திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வா் இன்பவள்ளி, பல்கலைக்கழக உடற்கல்வி ஒருங்கிணைப்பாளா் யோகப்பிரியா, மக்கள் தொடா்பு அலுவலா் சக்திமாலா உள்ளிட்டோா் பாராட்டினா்.