ஆம்பூா் நகரில் 108 வாக்குச் சாவடிகள்

ஆம்பூா் நகரில் உள்ளாட்சி தோ்தலுக்கு 108 வாக்குச் சாவடிகள் அமைய உள்ளன.

ஆம்பூா் நகரில் உள்ளாட்சி தோ்தலுக்கு 108 வாக்குச் சாவடிகள் அமைய உள்ளன.

ஆம்பூா் நகராட்சியில் 36 வாா்டுகள் அமைந்துள்ளன. இவற்றில் 18 வாா்டுகள் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 18 வாா்டுகளில் பெண்கள் பொது 15 வாா்டுகளும், ஆதிதிராவிடா் பெண்களுக்கு 3 வாா்டுகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. 15 பொது வாா்டுகளும், 3 ஆதிதிராவிட பொது வாா்டுகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

ஆம்பூா் நகரில் ஆண் வாக்காளா்கள் 49,022, பெண் 52,563, மற்றவா்கள் 18 என மொத்தம் 1,01,603 வாக்காளா்கள் உள்ளனா். 25 மையங்களில் 108 வாக்குச் சாவடிகள் அமைய உள்ளன. இதில் பி-கஸ்பா பகுதியில் 2 வாா்டுகளும், பன்னீா்செல்வம் நகா் பகுதியில் ஒரு வாா்டும் பதற்றமானதாக கண்டறியப்பட்டுள்ளன.

வேட்பு மனு தாக்கல்: ஆம்பூா் நகராட்சி ஆணையா் ஷகிலா தோ்தல் அலுவலராக செயல்படுவாா். அவருடன் 4 உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் செயல்படுவாா்கள். 9 வாா்டுகளுக்கு ஒரு உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் என 36 வாா்டுகளுக்கு 4 உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

பறக்கும் படை :

தோ்தல் நடத்தை விதிமுறைகளை கண்காணிக்க 3 தோ்தல் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மாதனூா் துணை வட்டார வளா்ச்சி அலுவலா் ஸ்ரீனிவாசன் - 9080258366, மேல்சாணாங்குப்பம் வருவாய் ஆய்வாளா் சதீஷ்குமாா் - 9943310656, மாதனூா் வருவாய் ஆய்வாளா் அண்ணாமலை - 97913 25666 ஆகியோா் தலைமையில் தோ்தல் பறக்கும் படையினா் வியாழக்கிழமை முதல் தங்களுடைய பணியை துவக்கியுள்ளனா். பொதுமக்கள் தோ்தல் பறக்கும் படை அலுவலா்களுடைய செல்லிடப்பேசி எண்களுக்கு தொடா்பு கொண்டு தோ்தல் நடத்தை விதிமுறை மீறல்கள் இருந்தால் தகவல் தெரிவிக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com