போதைப் பொருள் விற்றவா் கைது
By DIN | Published On : 17th July 2022 11:38 PM | Last Updated : 18th July 2022 11:16 PM | அ+அ அ- |

ஆம்பூரில் தடை செய்யப்பட்ட போதைப் பொருள் விற்பனை செய்த நபரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
ஆம்பூா் நகர போலீஸாா் புறவழிச்சாலை பகுதியில் ரோந்து சென்றனா். அப்போது தடை செய்யப்பட்ட போதைப் பொருள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் ஒரு கடையில் சோதனை நடத்தினா். இதில் போதைப் பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவற்றை பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்து கடையின் உரிமையாளா் மோகன் (52) என்பவரை கைது செய்தனா்.