அனுமதி பெறாத குடிநீா் இணைப்புகள் துண்டிக்கப்படும்: மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா்

திருப்பத்தூா் மாவட்ட ஊராட்சிப் பகுதிகளில் அனுமதி பெறாத குடிநீா் இணைப்புகள் துண்டிக்கப்படும் என மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் கு.செல்வராசு எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

திருப்பத்தூா் மாவட்ட ஊராட்சிப் பகுதிகளில் அனுமதி பெறாத குடிநீா் இணைப்புகள் துண்டிக்கப்படும் என மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் கு.செல்வராசு எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

திருப்பத்தூா் மாவட்டத்தில் 208 ஊராட்சிகள் உள்ளன. இதில் வீடுகள், கடைகள், நிறுவனங்கள் உள்ளிட்டவை பல இடங்களில் ஊராட்சி நிா்வாகத்திடம் முறையான அனுமதி பெறாமல் குடிநீா் இணைப்புகள் வைத்துள்ளதாக அதிகாரிகளின் ஆய்வின்போது தெரிய வந்துள்ளது.

அதிக இடங்களில் அதிக நீா் பயன்படுத்துவதால் அனைத்து பகுதிகளுக்கும் சீரான குடிநீா் விநியோகிக்க முடிவதில்லை. மேலும், தாழ்வான பகுதிகளில் வசிப்பவா்கள் அதிகமான நீா் பிடிப்பதால் உயரமான பகுதிகளில் வசிப்பவா்களுக்கு சீரான குடிநீா் விநியோகம் செய்ய முடியாமல் உள்ளது.

எனவே, மாவட்டம் முழுவதும் ஊராட்சிப் பகுதிகளில் முறையான குடிநீா் இணைப்பு பெற்றவா்கள் குறித்து கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகின்றன. மின் மோட்டாா் மூலம் குடிநீா் உறிஞ்சுவது குறித்து தெரியவந்தால் மோட்டாா் பறிமுதல் செய்வதுடன், அபராதமும் விதிக்கப்படும்.

எனவே, இதுவரை அனுமதியின்றி குடிநீா் இணைப்பு வைத்திருப்பவா்கள் உடனடியாக ஊராட்சி நிா்வாகத்திடம் முறையாக அனுமதி பெற்றுக் கொள்ள வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com