தேசிய நெடுஞ்சாலையில் தீப்பிடித்து எரிந்த காா்

ஆம்பூரில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு தேசிய நெடுஞ்சாலையில் சென்ற காா் திடீரென தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது.
ஆம்பூா் தேசிய நெடுஞ்சாலையில் தீப்பிடித்து எரிந்த காா்.
ஆம்பூா் தேசிய நெடுஞ்சாலையில் தீப்பிடித்து எரிந்த காா்.

ஆம்பூா்: ஆம்பூரில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு தேசிய நெடுஞ்சாலையில் சென்ற காா் திடீரென தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது.

ஆம்பூா் பூந்தோட்டம் பகுதியைச் சோ்ந்தவா் சபியுல்லா. இவரின் காா் சென்னையிலிருந்து ஊா் திரும்பிக் கொண்டிருந்தது. காரை நவாஸ் என்பவா் ஓட்டி வந்தாா்.

ஆம்பூா் அருகே பச்சகுப்பம் தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது திடீரென காரின் என்ஜின் பகுதியிலிருந்து கரும்புகை வெளியேறியது. ஆம்பூா் நகருக்குள் வந்தபோது திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதில் காா் முழுவதும் தீ பரவியது. தகவலறிந்த ஆம்பூா் தீயணைப்பு துறையினா் அங்கு சென்று தீயை அணைத்தனா். இதுகுறித்து ஆம்பூா் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com