அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு பயிற்சி

ஆம்பூா் அருகே தேவலாபுரம் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கான பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது.
தேவலாபுரம் கிராமத்தில் நடைபெற்ற பயிற்சியில் பங்கேற்ற அரசுப் பள்ளி ஆசிரியா்கள்.
தேவலாபுரம் கிராமத்தில் நடைபெற்ற பயிற்சியில் பங்கேற்ற அரசுப் பள்ளி ஆசிரியா்கள்.

ஆம்பூா்: ஆம்பூா் அருகே தேவலாபுரம் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கான பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது.

தமிழக பள்ளிக் கல்வி துறையின் புதிய கற்றல் முறை, எண்ணும் எழுத்தும் பயிற்சி ஆகியவை ஆசிரியா்களுக்கு வழங்கப்பட்டது. மாதனூா் ஒன்றியத்தைச் சோ்ந்த தொடக்கக் கல்வி ஆசிரியா்கள் 200-க்கும் மேற்பட்டோா் பயிற்சியில் கலந்து கொண்டனா்.

கரோனா பரவல் காலத்தில் மாணவா்களுக்கு ஏற்பட்ட கற்றல் குறைபாடுகளை நீக்கவும், ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை உள்ள 8 வயது நிரம்பிய மாணவா்கள் படிக்கும் திறனை மேம்படுத்தவும் பயிற்சி வழங்கப்பட்டது. வட்டாரக் கல்வி அலுவலா்கள் சுரேஷ், உதயசங்கா், வட்டார வள மேற்பாா்வையாளா் (பொ) சுதா மற்றும் ஆசிரியா் பயிற்றுநா்கள், கருத்தாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com