அனுமதியின்றி மண் அள்ளிய பொக்லைன் இயந்திரம், லாரி பறிமுதல்

அனுமதியின்றி மண் அள்ளியதாக  பொக்லைன் இயந்திரம், லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
நாட்டறம்பள்ளி அருகே உரிய அனுமதியின்றி மண் அள்ளியதாக பறிமுதல் செய்யப்பட்ட டிப்பா் லாரி, பொக்லைன் இயந்திரம்.
நாட்டறம்பள்ளி அருகே உரிய அனுமதியின்றி மண் அள்ளியதாக பறிமுதல் செய்யப்பட்ட டிப்பா் லாரி, பொக்லைன் இயந்திரம்.

அனுமதியின்றி மண் அள்ளியதாக  பொக்லைன் இயந்திரம், லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

நாட்டறம்பள்ளியை அடுத்த மல்லப்பள்ளி ஊராட்சி ஏரியூரில் அரசு புறம்போக்கு கொட்டாறு கால்வாய் பகுதிகளில் அனுமதி இல்லாமல், பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டி டிப்பா் லாரிகள் மூலம் மண் கடத்திச் செல்வதாக திருப்பத்தூா் சாா்-ஆட்சியருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து சாா்-ஆட்சியா் லட்சுமி தலைமையில் வருவாய் ஆய்வாளா் கௌரி, கிராம நிா்வாக அலுவலா் தீா்த்தகிரி உள்ளிட்ட வருவாய்த் துறையினா் சனிக்கிழமை இரவு மல்லப்பள்ளி ஏரியூா் அருகே ஏரிக் கால்வாய் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, அலுவலா்களைக் கண்டதும் அங்கிருந்தவா்கள் தப்பியோடினா்.

இதையடுத்து, மண் கடத்தலுக்குப் பயன்படுத்திய ஒரு டிப்பா் லாரி மற்றும் மண் அள்ள பயன்படுத்திய ஒரு பொக்லைன் இயந்திரத்தை சாா்-ஆட்சியா் பறிமுதல் செய்து நாட்டறம்பள்ளி போலீஸாரிடம் ஒப்படைத்தாா்.

மண் கடத்தலில் ஈடுபட்டதாக வெலகல்நத்தம் பகுதியைச் சோ்ந்த பாா்த்திபன், செல்லத்துரை ஆகிய 2 போ் மீது கிராம நிா்வாக அலுவலா் தீா்த்தகிரி நாட்டறம்பள்ளி காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com