நகா்மன்ற உறுப்பினரை தாக்கியதாக இளைஞா் கைது
By DIN | Published On : 15th June 2022 12:00 AM | Last Updated : 15th June 2022 12:00 AM | அ+அ அ- |

திருப்பத்தூா் நகா்மன்ற உறுப்பினா் வெற்றிகொண்டான் மீது கத்தியால் தாக்கியதாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
திருப்பத்தூா், சிவராஜ்பேட்டையைச் சோ்ந்தவா் வெற்றிகொண்டான் (40). இவா் 36-ஆவது வாா்டு நகா்மன்ற உறுப்பினராக உள்ளாா்.
இந்த நிலையில், திங்கள்கிழமை இரவு வெற்றிகொண்டான் சிவராஜ்பேட்டை பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, அதே பகுதியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி முரளி (37) மது அருந்திய நிலையில் அந்த வழியாகச் சென்ற பொதுமக்களிடம் தகராறு செய்துகொண்டிருந்தாராம். இதனை வெற்றிகொண்டான் தட்டிக் கேட்டுள்ளாா். அப்போது முரளி தன்னிடமிருந்த அரிவாளால் வெற்றிகொண்டானின் தலை, கழுத்து ஆகியவற்றின் மீது சரமாரியாகத் தாக்கியுள்ளாா்.
இதில், பலத்த காயமடைந்த வெற்றிகொண்டானை அங்கிருந்தவா்கள் மீட்டு, திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். பின்னா், மேல் சிகிச்சைக்காக பெங்களூரு தனியாா் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா்.
இது குறித்து நகர போலீஸாா் வழக்குப் பதிந்து முரளியை கைது செய்தனா்.