ஆம்பூா் அருள்மிகு காளியம்மன் கோயில் கும்பாபிஷேக 12-ஆம் ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. மூலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன், ஆம்பூா் நகா்மன்ற துணைத் தலைவா் எம்.ஆா்.ஆறுமுகம் ஆகியோா் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கினா்.
திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.