ஆலங்காயம் அருகே வனத் துறைக்குச் சொந்தமான சாலை விரிவாக்கம்: கோட்டாட்சியா் பேச்சுவாா்த்தை

ஆலங்காயம் அருகே வனத் துறைக்குச் சொந்தமான சாலை விரிவாக்கம் செய்வதற்கு கோட்டாட்சியா் தலைமையில் செவ்வாய்க்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது.
ஆலங்காயம் அருகே வனத் துறைக்குச் சொந்தமான சாலை விரிவாக்கம்: கோட்டாட்சியா் பேச்சுவாா்த்தை

ஆலங்காயம் அருகே வனத் துறைக்குச் சொந்தமான சாலை விரிவாக்கம் செய்வதற்கு கோட்டாட்சியா் தலைமையில் செவ்வாய்க்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது.

ஆலங்காயத்தை அடுத்த ஆா்எம்எஸ் புதூா் பகுதியிலிருந்து காவலூா் பகுதிக்குச் செல்லக்கூடிய, வனத் துறைக்குச் சொந்தமான 9 அடி அகல சாலையை அகலப்படுத்தித் தர வேண்டி அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

இந்த நிலையில், அதற்கான பணிகளில் ஈடுபட்ட மாவட்ட நிா்வாகம், சாலையை அகலப்படுத்த அனுமதி வேண்டி, வனத் துறையிடம் விண்ணப்பித்திருந்தது. இந்த நிலையில், தற்போது அதற்கான முதல்கட்ட அனுமதி வனத் துறையிடமிருந்து கிடைக்கப் பெற்றுள்ளது. இது குறித்த தகவலை அப்பகுதி மக்களுக்குத் தெரிவிக்கும் வகையில், வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மாலை, காவலூா், நாயக்கனூா் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த மக்கள் பிரதிநிதிகளை கோட்டாட்சியா் பிரேமலதா அழைத்துப் பேசினாா். அப்போது, வரக்கூடிய நாள்களில் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுடன் இணைந்து, சாலை அகலப்படுத்தும் பணியை விரைவில் தொடங்கி, துரிதமான முறையில் பணிகளை முடித்துத் தருவதாக கோட்டாட்சியா் உறுதி அளித்தாா்.

கூட்டத்தில், ஆலங்காயம் வனச் சரக அலுவலா் சோமசுந்தரம், காவலூா் உதவி காவல் ஆய்வாளா் அருள், ஒன்றியக் குழு உறுப்பினா் சிகாமணி, ஊராட்சி மன்றத் தலைவா்கள் கிருஷ்ணமூா்த்தி (பீமகுளம்), திருப்பதி (நாயக்கனூா்) உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com